Viral Video..!! டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுத எம்.எஸ்.தோனி..!! புதிய வீடியோ வைரல்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

பச்சை மைதானத்தில் பந்தாடிய தோனி, பசித்த வயிறுக்கு சோறுபோடும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்ற வீரர்களைப் போன்று பொதுவெளியில் அடிக்கடி தோன்றி மக்கள் பார்வையில் இருப்பவர் அல்ல. பொதுவாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருப்பார். எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வார். இந்நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். ‘புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது’ என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் டிராக்டர் ஓட்டி தனது பண்ணையில் வயலை உழுவதை காணமுடிகிறது. விவசாயியாக மாறிய தோனியின் இந்த புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த தோனி, பசித்த வயிற்றுக்கு விருந்து படைக்கும் விவசாயியாக அவதாரம் எடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி வீடியோ வெளியிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், தனது பண்ணையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்து சாப்பிடுவதை காணலாம்.

CHELLA

Next Post

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு...! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Thu Feb 9 , 2023
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் உள்ள அலுவலகத்தில் 27.02.2023 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் […]
1092251 india post recruitment 2022

You May Like