இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கள்ளக்காதலர்கள் சிக்கும் வீடியோ பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு திருமணமான பெண் வசமாக சிக்கினார். இந்த சம்பவம் ஜூலை 23 புதன்கிழமை சிம்போலி காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஒரு ஹோட்டலில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
தகவல்களின்படி, அந்தப் பெண் தனது காதலனை பல நாட்களாக ரகசியமாக சந்தித்து வந்ததாகவும், இதனால் அவரின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.. அப்போது அப்பெண் ஒரு OYO ஹோட்டலில் இருப்பது தெரியவந்துள்ளது..
ஹோட்டல் அறைகளில் ஒன்றின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணும் அவரது காதலனும் அறையில் நிர்வாணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையால் கோபமடைந்த உறவினர்கள் உடனடியாக காதலனைப் படம் பிடிக்கத் தொடங்கினர். தன்னை கேமராவில் படம் பிடிப்பதை பதிவு செய்யப்படுவதை உணர்ந்த அந்த நபர், உறவினர்களில் ஒருவர் தன்னைப் பின்தொடர்வதைக் கண்டு பீதியடைந்து அறையை விட்டு நிர்வாணமாக ஓடிவிட்டார். அவர் நிர்வாணமாக நெடுஞ்சாலையில் ஓடத் தொடங்கினார்.
குடும்ப உறுப்பினர்கள் அவரைத் துரத்த முயன்ற போதிலும், அவர் தப்பி ஓடிவிட்டார்.. இந்த சங்கடமான காட்சியை அந்த வழியாகச் சென்ற பலர் பார்த்தனர்.. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலானது. உள்ளூர்வாசிகள் மற்றும் உறவினர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர், மேலும் இந்த சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.