மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) 2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்காக பல்வேறு துறைகளில் கல்வி முடித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:
- 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்
- திறன் சான்றிதழ் (Certificate Course) முடித்தவர்கள்
- ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றவர்கள்
- ஆய்வக உதவியாளர் (Lab Assistant) துறையில் சான்றிதழ் பெற்றவர்கள்
- நிர்வாகம் / மனிதவள மேலாண்மை (HR/Administration) துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்கள்
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்
- பொறியியல் பட்டப்படிப்பு (Engineering Degree) பெற்றவர்கள்
- டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள்
- மேலும், விண்ணப்பதாரர்கள் 2022 முதல் 2025 வரை கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.
உதவித்தொகை:
* 12-ம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு தகுதிப்பெற்றவர்களுக்கு மாதம் ரூ.9,600 உதவித்தொகை வழங்கப்படும்.
* ஐடிஐ தகுதிப் பெற்றவர்களுக்கு ரூ.11,040 உதவித்தொகை வழங்கப்படும்.
* ஆய்வக உதவியாளர், செயலக அலுவலக உதவியாளர், பட்டப்படிப்பு தகுதிப்பெற்றவர்கலுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.
* பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான இந்த வாய்ப்பிற்கு ஆர்வமுள்ளவர்களில் இருந்து, தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறைகள் தொடர்பாகவும், குறுக்கீடு (shortlisting) நடைமுறைகள் பற்றியும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு வழியாக விண்ணப்பதாரர்கள் பின்னர் தெளிவான தகவல்களைப் பெறலாம். இதன் மூலம், தேர்வு முழுக்க தகுதியும் கல்வி திறனும் அடிப்படையாகக் கொண்ட நியாயமான நடைமுறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது? சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL) தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ என்ற இணையதளங்கள் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பிக்க நவம்பர் 7-ம் தேதியே கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



