திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. மேலும் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, பழி போடும் அரசியல் செய்வது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல், பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பேசுவது, கரூர் சம்பவத்தில் மக்களை சந்திக்காமல் ஓடியது, தனது தொண்டர்களை ( ரசிகர்களை) கட்டுப்படுத்தாதது என விஜய் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.. இந்த விமர்சனங்களை விஜய்யும் தவெகவினரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.. 2026-ல் தவெக ஆட்சியமைக்கும் என்று உறுதியாக கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான்.. அந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது.. ஒவ்வொரு பெண்ணின் வங்கிக்கணக்கிலும் ரூ.10,000 போடப்பட்டது தான் பீகாரில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றிக்கு காரணம்.. மகளிர் ஓட்டுகள் கணிசமாக அந்த கூட்டணிக்கு சென்றது.. அந்த கூட்டணியும் பலமாக அமைந்தது.. எந்த ஒரு மாநில தேர்தல் முடிவுகளும் மற்றொரு மாநில தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது..
விஜய்க்கு கணிசமான வாக்குகள் வரும்.. ஆனால் அந்த வாக்குகள் சீட்டுகளாக மாறாது.. மும்முனை போட்டி, 4 முனை போட்டி எதுவாக இருந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.. விஜய் கட்சிக்கு வாக்குகள் வரும்.. ஆனால் அவை சீட்டுகளாக மாறாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
கரூர் சம்பவத்திற்கு முன்பு வரை தவெகவுக்கு 20% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.. அந்த நம்பிக்கையில் தான் 2026-ல் தவெக ஆட்சியமைக்கும், விஜய் முதல்வராவார் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.. ஆனால் விஜய்யின் தவெகவுக்கு அதிகபட்சம் 5% தான் வாக்குகள் கிடைக்கும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.. எனினும் விஜய் எவ்வளவு வாக்குகளை பெறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



