வேள்பாரி புத்தக வெற்றி விழாவில் பேசிய ரஜினி, பிரபல இயக்குனரின் விமர்சனத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேல்பாரி நாவல் புதிய சாதனை படைத்துள்ளது. வாசகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவல் சுமார் 1 லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில், வேள்பாரி நாவலின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.. இந்த விழாவில் பேசிய ரஜினி, புத்தகம் குறித்து சு. வெங்கடேசன் குறித்தும் பேசினார். மேலும் பேசிய அவர் “ இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒரு ஹீரோவை அழைக்க வேண்டும் என்றால் சிவகுமார் இருக்கிறார்.. எவ்வளவோ பேசுகிறார்.. மகாபாரத்தை 6 மணி நேரத்தில் கூறுகிறார்.. எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவார்.. அவர் வேண்டாம் என்றால் கமல்ஹாசன் இருக்கிறார்.. எவ்வளவு பெரிய அறிவாளி, எவ்வளவு படித்திருக்கிறார்..
அதெலாம் விட்டுவிட்டு.. இந்த 75 வயதிலும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லொ மோஷன்லயே நடந்து வர இந்த ஆள கூப்பிட்டி இருக்காங்களே என்று யாரும் நினைப்பார்கள்.. எனவே ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன்..” என்று தெரிவித்தார். இதன் மூலம் சிவகுமாரை, கமல்ஹாசனை புகழ்ந்து பேசி கிட்டத்தட்ட தன்னை தாழ்த்தி பேசியிருக்கிறார் ரஜினி.. ஆனால் இந்த பேச்சு மூலம் தன் மீதான விமர்சனத்திற்கு ரஜினி பதிலடி கொடுத்துள்ளார்..
கடந்த சில மாதங்களுக்கு பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ரஜினி குறித்து பேசியிருந்தார். ஸ்லோ மோஷன் மட்டும் இல்லை எனில், ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.. ரஜினி போன்ற பெரிய நடிகர்களால் சாதாரண கேரக்டரில் நடிக்க முடியாது.. ஸ்டார் பாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். அவரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..” என்று கூறியிருந்தார்..
ராம் கோபால் வர்மாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி இவ்வாறு பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது..
Read More : ரூ.250 கோடி.. மிகவும் விலை உயர்ந்த இந்த காரின் உரிமையாளர் யார் ? அம்பானி, அதானி இல்ல..