பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.
தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் என்ற காலத்தை தேர்வு செய்யலாம். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டாலும், அது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதில், 5 வருட காலத் திட்டம் அதிக வட்டி விகிதத்தை (தற்போது 7.5%) வழங்குவதுடன், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-இன் கீழ் வரிச் சலுகையும் பெறுவதால், மிகவும் பிரபலமாக உள்ளது.
5 வருட திட்டத்தின் தனிச்சிறப்பு, இதில் கிடைக்கும் கூட்டு வட்டி நன்மைதான். இதன் மூலம் உங்கள் முதலீடு காலப்போக்கில் விரைவாக வளர உதவுகிறது. உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ரூ.5 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டியில் முதலீடு செய்தால், 5 வருட முடிவில் அது சுமார் ரூ.7.21 லட்சமாக உயரும். இந்தத் தொகையை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு மறுமுதலீடு செய்வதன் மூலம், மொத்தமாக 10 வருட முடிவில் அவரது முதலீடு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.10.40 லட்சமாக இரட்டிப்பாக உயரும். இது மூத்த குடிமக்களுக்கு நிலையான வருமான ஆதாரமாகவும், வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளை விடவும் சிறந்த வருமானத்தையும் குறைந்த ரிஸ்க்கில் உறுதி செய்கிறது.
Read More : தீபாவளி பண்டிகை.. அதிரடியாக விலை குறைந்த ஆவின் பொருட்கள்..!! இதுதான் செம சான்ஸ்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!