எச்சரிக்கை!… கண்ணில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?… புதிய வகை கொரோனா!… குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்!

புதியதாக பரவிவரும் ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட்டுக்கான அறிகுறிகளாக அதிக காய்ச்சல், இருமல் மற்றும் கண் அரிப்பு, கண் சிவத்தல் ஆகியவை ஏற்படும் என்று கூறப்படுகிறது.


அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் புதிதாக பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில், மற்ற ஓமைக்ரான் வகைகளில் இல்லாத வகையில் குழந்தைகளுக்கு அறிகுறிகள் அதிகம் தென்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது புதிய ஆர்க்டரஸ் (Arcturus) வேரியன்ட், மார்ச் மாத இறுதியில் XBB.1.16 ஐ “கண்காணிப்பில் உள்ள வேரியன்ட்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது மேலும் பரவக்கூடிய வேரியன்ட் என்று கூறியிருந்தது. உலக சுகாதார அமைப்பால் XBB.1.16 வேரியன்ட் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய வேரியன்ட் என்று WHO இன் கோவிட் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார். குழந்தை மருத்துவரும், Indian Academy of Pediatrics Committee-இன் முன்னாள் தலைவருமான டாக்டர் விபின் வசிஷ்தா இந்த புதிய வேரியன்ட்டின் அறிகுறிகளை கூறுகிறார், “அதிக காய்ச்சல், இருமல் மற்றும் கண் அரிப்பு, கண் சிவத்தல் ஆகியவை அடங்கும்”, என்கிறார்.

வைரஸின் அறிகுறிகளின் தொகுப்பு உண்மையிலேயே மாறியிருக்கிறதா இல்லையா என்பது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் சில நாட்கள் வேண்டும், என்று ஆர்டிஐ இன்டர்நேஷனல் இன் தொற்றுநோயியல் நிபுணரான ரிச்சர்ட் ரெய்திங்கர் கூறினார். மேலும், கண் எரிச்சல் ஒரு கோவிட் அறிகுறியாக முன்னர் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தவகை கொரோனா வேரியன்ட்டுக்கு, கண் பாதிப்புகள்தான் அறிகுறிகள் ஆக உள்ளது என்றும், அதிக காய்ச்சல், இருமல் மற்றும் கண் அரிப்பு, கண் சிவத்தல் ஆகியவை ஏற்படும் என்று Nebraska Medicine’s Truhlsen Eye Institute’ ஆராய்ச்சியாளர்கள் கண்ணின் கண்ணீர்ப் படத்தில் வைரஸை அடையாளம் காணப்பட்டதையடுத்து தெரியவந்துள்ளது. மேலும், இது வெண்படலத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எக்ஸ்பிபி.1.16 மற்றும் அதன் வேரியன்ட்கள் மற்ற கோவிட் வகைகளை விஞ்சும் திறனைக் கொண்டுள்ளன என்று நியூ யார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆராய்ச்சி மற்றும் இணைப் பேராசிரியரான ராஜ் ராஜநாராயணன் கூறினார். மேலும், XBB.1.16 என்பது BA.2 இன் இரண்டு துணை வகைகளின் மறு இணைப்பாகும். டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ப்ரீபிரிண்ட் ஆய்வில், இந்த வேரியன்ட்டின், துணை வேரியன்ட்களான XBB.1 மற்றும் XBB.1.5 ஐ விட 1.17 முதல் 1.27 மடங்கு மிகவும் அதிகமான பரவும் தன்மையை கொண்டுள்ளது, என்று பரிந்துரைத்தது. இது எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பரவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

மெகா வாய்ப்பு...! 7,500 பணியிடங்கள்... மே 3-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Sat Apr 15 , 2023
மத்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில்‌ 18 முதல்‌ 27 ஆகும்‌.வயது வரம்பில்‌ தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடியினவருக்கு 5 வருடங்கள்‌ […]
SSC EXAM 2 1

You May Like