கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதனால் நிலை குலைந்த பெற்றோர், கதறியபடியே குழந்தையை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்த துயரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, உயிரிழந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சளி மருந்து, இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட இருமல் மருந்து வகையைச் சேர்ந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மருந்து குறித்த முழுமையான விவரங்களைச் சேகரிக்கக் காவல்துறையினரும், சுகாதாரத் துறையும் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளுக்கு மருந்து அளிக்கும்போது பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.
Read More : கொழுந்தனாரின் ஆணுறுப்பை அறுத்து தூக்கி வீசிய அண்ணி..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் காரணம்..!!



