பால் என்பது நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான பானமாகும். பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பால் செயல்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது, எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று உணவு மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மீன், சிட்ரஸ் மற்றும் வாழைப்பழங்கள் :
மீன் : பால் இயற்கையில் குளிர்ச்சி தன்மை கொண்டது, மீன் வெப்பமூட்டும் தன்மை கொண்டது. இவை இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும்போது, செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு, வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். எனவே, பால் குடித்த பிறகு மீன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனுடன் சிட்ரஸ் பழங்களைச் சேர்க்கும்போது, இது வயிற்றில் வாயுத் தொல்லை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வாழைப்பழம் : பலர் செய்யும் பொதுவான தவறு இதுதான். வாழைப்பழமும் பாலும் ஒன்றாக சேரும்போது, அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதன் காரணமாக சோர்வு மற்றும் தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
உப்பு நிறைந்த உணவுகள் : பால் குடித்த பிறகு அதிகப்படியான உப்பு சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது உடலின் நீரேற்றத்தைச் சமன்படுத்தாமல், நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதிக உப்பு உட்கொள்ளல் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைவதால், இதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
முள்ளங்கி : முள்ளங்கி இயற்கையாகவே வெப்பமான தன்மை கொண்டது. இது குளிர்ச்சியான பாலுடன் சேரும்போது, வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்த செரிமானச் செயல்முறைக்கும் இடையூறு விளைவிக்கும்.
பச்சைக் காய்கறிகள் (கீரை) : கீரை போன்ற பச்சை காய்கறிகளை பால் குடித்த பிறகு சாப்பிடுவது செரிமான மண்டலத்துக்கு கடினமான கலவையாக அமையும். இவை ஒன்றாக சேரும்போது வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
முலாம்பழம் : பால் குடித்தவுடன் முலாம்பழம் சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இந்த இரண்டு உணவுகளின் கலவையும் செரிமான செயல்முறையை மிகவும் மெதுவாக்குகிறது.
Read More : ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி..? வழிபட வேண்டிய வழிமுறை..!! உகந்த நேரம் எது..?