வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. லைசன்ஸ் ரத்தாகலாம்.. புதிய ஓட்டுநர் விதிகளை வெளியிட்ட அரசு..

AA1IyhtX

ஜனவரி 1, 2026 முதல், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ABS மற்றும் இரண்டு BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் கட்டாயமாகும். மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.


வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் ஜனவரி 1, 2026 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) புதிய விதிகளை அமல்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வைத்திருப்பது கட்டாயமாகும். இதைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் 2 BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள்

மேலும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் சவாரி செய்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதங்களுக்கு அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

40% சாலை விபத்துகள் பைக்குகளால் ஏற்படுகின்றன என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. இதைக் குறைத்து பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விதிகள் கண்டிப்பாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய விதிகள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள் தேவையான பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே உறுதி செய்வது அவசியம்.

Read More : ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இதை செய்யலன்னா டிக்கெட் புக் பண்ண முடியாது.. இன்று முதல் புதிய மாற்றங்கள் அமல்..

RUPA

Next Post

#Breaking : இனி அரசு திட்டங்கள் வீடு தேடி வரும்.. 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..

Tue Jul 15 , 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட உள்ளன. […]

You May Like