டெல்லியில் நடந்தது தற்கொலைப் படை தாக்குதலா? CCTVயில் சிக்கிய நபர்.. நேற்று கைதான பயங்கரவாதிகளுக்கு தொடர்பு?

delhi car blast 2

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.


இந்த நிலையில் செங்கோட்டை அருகே வெள்ளை Hyundai i20 கார் சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெடிப்பில் 9 பேர் பலியான, 20 பேர் காயமடைந்தனர். கார் HR 26CE7674 என்ற நம்பர் பிளேட்டை கொண்டது. ஊடகங்களின் தகவலின்படி, காரை பார்க்கிங் லாட்டில் 3 மணி நேரத்துக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டது, மாலை 3:19 மணிக்கு நுழைந்து 6:30 மணிக்கு வெளியேறியது.

CCTV மற்றும் புகைப்படங்கள்:

ஒரு நிமிடம் நீளமான வீடியோவில் கார் Badarpur எல்லையை கடக்கிறது. சந்தேகத்திற்குரிய நபர் ஜன்னலில் கை வைத்திருப்பது படத்தில் தெளிவாகக் காணப்படுகிறது. டிரைவர் நீல-கருப்பு டீ-ஷர்ட் அணிந்திருந்தார்.. 3-வது படத்தில் கார் தேசிய தலைநகரில் ஒரு பரபரப்பான சாலையில் செல்கிறது.

இந்த வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.. தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கார் பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டபோது அவர் ஒரே நிமிடத்திற்கும் வெளியே வரவில்லை. அவர் யாருக்காகவோ அல்லது யாரின் உத்தரவுக்காக காத்திருந்தார்.

வெடிப்பு நேரம் மற்றும் விளைவுகள்:

செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே காலை 6.52 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில் பல உடல்களும், சிதைந்த கார்களும் பரபரப்பான பகுதியில் சிதறிக்கிடந்தன. தரையில் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏராளமான பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை நிரப்பினர். காயமடைந்த பலரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்கள் அருகிலுள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு (LNJP) விரைந்து சென்றன.

இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தடயவியல் சான்றுகள் மற்றும் உளவுத்துறை தகவல்கள் பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து, டெல்லி போலீசார் UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பிரிவுகளைப் பயன்படுத்தினர்.

டெல்லி மற்றும் அருகிலுள்ள பிற மாநிலங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், ஹரியானா, பஞ்சாப், ஹைதராபாத், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களிலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. இன்று இறுதிக்கட்ட சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள பீகாரிலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து 50 கி.மீ தொலைவில், அண்டை மாநிலமான ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்ட நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் i20 கார் வெடிமருந்து கைப்பற்றப்பட்டதால், குண்டுவெடிப்புக்கும் “வெள்ளை காலர்” பயங்கரவாத கும்பலுக்கும் இடையே ஒரு தொடர்பு வெளிப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

விசாரணை அதிகாரிகள், அந்த பயங்கரவாத நெட்வொர்க்கின் இரண்டு முக்கிய உறுப்பினர்களான டாக்டர் முஜம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் அடில் ராதர் ஆகியோரையும் கைது செய்ததுடன், வெடிப் பொருட்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.. காரை வைத்திருந்த டாக்டர் உமர் முகமது பீதியடைந்து செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. உமர் மேலும் இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதலைத் திட்டமிட்டு காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. பரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன…

RUPA

Next Post

இறப்பது சட்டவிரோதம்.. மரணம் தடை செய்யப்பட்ட உலகின் ஒரே நகரம்..! எங்கே தெரியுமா..?

Tue Nov 11 , 2025
Dying is illegal.. The only city in the world where death is banned..! Do you know where..?
Lanzaron of Spain

You May Like