அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) இணைய விரும்பியது. ஆனால், உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாக இருப்பதாகக் கருதிய ரஷ்யா, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்கியது.
இந்த போர் தற்போது 3 ஆண்டுகளை காலத்தை கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலையில், உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் – புதின் சந்திப்பின்போது, இதற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தெரிகிறது.
இந்த சூழலில் தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தது ரஷ்ய அதிபர் புதின் அல்ல என்றும் அவரது போலி என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரம்பை சந்தித்த புதினுக்கு முகவாய் கட்டை சிறியதாக இருந்ததாகவும், வழக்கமான கம்பீரம் அவரிடம் இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின், வித்தியாசமாக நடந்து கொண்டதாகவும், டிரம்பை சந்தித்தது புதினின் BODY DOUBLE என்று தெரிவித்துள்ளனர்.