வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஓசன் கேட் என்ற நிறுவனத்தின் டைட்டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18ஆம் தேதி 5 சுற்றுலாப் பயணிகளுடன் நீருக்குள் மூழ்கியது. இந்தக் கப்பலுக்கு உதவி செய்யும் வகையில் கடல் மட்டத்தில் மற்றொரு கப்பல் காத்திருந்தது. நீருக்குள் உள்ள இந்த ஓசன் கேட் கப்பல் கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருக்கும்.இந்நிலையில் சம்பவத்தன்று ஓசன் கேட் கப்பல் கடலுக்குள் மூழ்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அது கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் தொடர்பை இழந்தது. இதனால் டைட்டன் கப்பல் தொலைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு கடற்படை வீரர்கள் இந்த கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்பொழுது இந்த கப்பல் அழுத்த மாற்றம் காரணமாக இம்புளோஷன் ஏற்பட்டு விபத்தில் சிக்கியிருக்கலாம். இதனால் கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் இப்படியான சிக்கலில் சிக்கும் என முன்னரே கணிக்கப்பட்டு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு இந்த ஓசியன் கேட் நிறுவனத்தின் மெரைன் ஆபரேஷன்ஸ் துறையின் இயக்குனராக பணியாற்றியவர் டேவிட் லோ பிரைஸ் லிஸ்ட். இவர் அந்நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும்போது அந்நிறுவனம் தயாரித்து வரும் இந்த டைட்டன் கப்பல் அதிகமான டெஸ்ட் செய்யப்பட வேண்டும். அதிகமான ஆழத்திற்குச் செல்லும் போது இந்த நீர்மூழ்கி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இம்புளோஷன் நடக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
அவர் பொதுவெளியில் இந்த கருத்தை தெரிவித்ததால் அவர் மீது ஓசன் கேட் நிறுவனம் அமெரிக்கா சியாட்டில் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு போட்டிருந்தது. இந்த வழக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து முடித்து வைக்கப்பட்டது. என்ன தீர்ப்பு என்பது பொது வெளியில் வெளியிடப்படாமல் முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்த ஓசன் கேட் நிறுவனம். இந்த நீர் மூழ்கி கப்பல் கார்பன் பைபர் கூடால் அமைக்கப்பட்டுள்ளது. இதை டெஸ்ட் செய்ய இதுவரை எந்தவிதமான சாதனமும் இல்லை என கூறியுள்ளது. தற்போது இந்த நீர்மூழ்கி சரியாக டெஸ்ட் செய்யப்படாததால் தான் இப்படியான விபத்து நிகழ்ந்துள்ளது என என்ன பேசப்படுகிறது.
ஓசன் கேட் நிறுவனம் இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 14 ஆயிரம் அடி வரை செல்லும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது விபத்து நடந்தது 13,000 அடியில் தான். அதாவது அந்த கப்பல் தாக்கும் அளவிலான ஆழத்தில் தான் இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டேவிட் இந்நிறுவனத்தை விட்டு விலகும் போதே இந்த நீர்மூழ்கி கப்பல் வெறும் 4265 அடி வரைதான் செல்லும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளது என குறிப்பிட்டு பேசியிருந்தார். அவரது கருத்தை அலட்சியம் செய்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.