பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் என்று சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கிறார். இவர், கடந்த 2019இல் வெளிவந்த ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் ஆகிய படங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தனது மனைவியை பிரியப்போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலாவி வந்தது.
இந்நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். ஜாய் கிரிஸில்டா, சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் உடன் திருமணமான நிலையில், இவரும் பிரிந்தனர். இந்த சூழலில் தான், மாதம்பட்டியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும், பிறக்கப்போகும் குழந்தையின் பெயர் ராஹா ரங்கராஜ் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் – கிரிஸ்ல்டா இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படம் மற்றும் லிப் லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தை ஒரு வீடியோவாக கிரிஸ்ல்டா வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read More : இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!! உங்கள் வீடே பளிச்சென ஜொலிக்கும்..!! இல்லத்தரசிகளே சூப்பர் டிப்ஸ்..!!