விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை இருப்பவருக்கே ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தான். அவர் மருத்துவதுறையை சேர்த்தவர் என்ற காரணத்திற்காகவே அவரை பிக்பாஸ் குழு தேர்வு செய்துள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்தார். மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக விஜய் சேதுபதி இவரை மேடைக்கு அழைத்தபோது பார்வையாளர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால், பார்வையாளர்கள் யாரும் கைத்தட்டவில்லை. இதனால் ‘கை தட்டுங்க பாவம்’ என விஜய் சேதுபதி சொல்ல அதன்பின் பார்வையாளர்கள் கை தட்டினார்கள்.
அதேபோல் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கிய அரோராவை வீட்டிற்குள் சந்தித்து பேசி விட்டு, உங்க கண் அழகாக இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டதும் அங்கு இருந்த மூன்றாவது போட்டியாளரான எஃப்.ஜே அந்த பொண்ணுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுது என்று கூறி கலாய்த்தார்.
அதன் பின்னர் மேலும் சில போட்டியாளர்கள் எல்லாரும் சென்ற பின்னர், தனது வழக்கமான சில நடிப்பு தொல்லைகளான சிவாஜி போல நடிப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டினார். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் நடந்து வர, அருகில் நின்று கொண்டு இருந்த பார்வதியின் உடையை மிதிக்க, உடனே அவர் ” ஏய் பாவாடை பாவாடை ” என்று கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.