கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து மீண்டும் கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து டிடிவி தினகரன் பேசிய போது “ இந்த கஞ்சா மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளோம்.. இந்த தேர்தலில் என்.டி.ஏவின் வெற்றிக்காக அமமுக தொண்டர்கள் உழைப்பார்கள்.. 2021-ல் தவறிய அம்மாவின் ஆட்சி, 2026-ல் நிச்சயம் அமைப்போம்..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : “ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை NDA கூட்டணி வழங்கும்..” பியூஷ் கோயல் – டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி..!



