எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய விவாதம் மீண்டும் கிளம்பி உள்ளது..
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்கை வழக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.. இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கோடநாடு பங்களாவில் காவலாளியை கட்டி வைத்துவிட்டு ஜன்னலை உடைத்து என்ன ஃபைல்களை தேடினார்கள்? அது யார்? ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உளவுத்துறையிடம் இருந்து எம்.எல்.ஏக்கள். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரும் அறிக்கைகள் போயஸ் கார்டனிலேயே இருக்கும்..
நானும், மருத்துவர் வெங்கடேஷும் படித்து சிரித்துவிட்டு கிழித்து எரித்துவிட்டோம்.. அதனை வைத்து நாங்கள் யாரையும் பிளாக் மெயில் செய்யமாட்டோம்.. சசிகலா அப்போது ஜெயலலிதா அறையில் இருந்த தேவையில்லாத ஃபைல்களை பாருங்கள்.. தேவையில்லாததை நீக்கிவிடுங்கள் என்றார்.. அப்போது அதனை எரித்துவிட்டோம்.. அதே போல் கொடநாட்டில் இருக்கிறது என்று யாரோ பயம் கொடுத்துவிட்டார்கள்..
கோடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலைகளை யோசித்து பாருங்கள்.. கோடநாடு கொலை, கொள்ளை நடந்த போது சசிகலா சிறையில் இருந்தார்.. அந்த சமயத்தில் நானும் டெல்லியில் விசாரணையில் இருந்தேன்.. கொடநாடு விவகாரத்தில் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள்.. ஏப்ரல் 17-ம் தேதி என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.. என்னை கட்சியை விட்டு நீக்கியதால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் இன்னும் அதிகமாகி விட்டது.. ஆனால் அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை எல்லாம் போயஸ் கார்டனில் தான் இருந்தது என்று..
அதனை வைத்து பிளாக்மெயில் செய்ய வேண்டும் என்ற கேவலமான எண்ணம் எல்லாம் இல்லை.. அவை அனைத்தையும் எரித்துவிட்டோம்.. பாவம் பழனிசாமி கோடநாடு சென்று தேடி உள்ளார்..” என்று தெரிவித்தார்..
Read More : திமுக – தவெக இடையே தான் போட்டி.. அதிமுகவுக்கு 3-வது இடம் தான்.. அடித்து சொல்லும் டிடிவி தினகரன்..!



