சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனிமையில் வசித்து வந்த 45 வயதான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுவனுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பது மருத்துவ ரீதியாக ‘லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்’ என மருத்துவர்கள் கூறினாலும், இதன் பின்னணியில் உள்ள சட்ட ரீதியான சிக்கல்கள் காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினசரி பத்திரிகை விநியோகம் செய்யும் ராகுல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்த சிறுவன், சுமதியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததும், அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. “ஒரே ஒரு முறை மட்டுமே உறவு கொண்டேன், நான் அந்த குழந்தைக்குத் தந்தை இல்லை” என்று அந்தச் சிறுவன் கண்ணீர் மல்கக் கூறினாலும், சுமதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
18 வயது பூர்த்தியடையாத சிறுவனுடன் உறவு கொள்வது சட்டப்படி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வரும் என்பதால், சுமதி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தன் மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறைக்கு செல்ல நேரிட்டாலும் பரவாயில்லை என கூறும் சுமதி, கருக்கலைப்பு செய்ய போவதில்லை என்றும், பிறக்கப்போகும் குழந்தையை தானே வளர்க்கப் போவதாகவும் அடம் பிடித்து வருகிறார். இதனால் அந்தச் சிறுவனின் குடும்பம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்தக் குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய தற்போது டி.என்.ஏ (DNA) பரிசோதனை செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது. சட்ட ரீதியான போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சிறுவனின் எதிர்காலம் மற்றும் ஒரு பெண்ணின் பிடிவாதம் என இந்த வழக்கு மர்மம் நீடிக்கிறது.
Read More : இதய நோயாளிகளே..!! லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நல்லதல்ல..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!



