“உலகத்தை 150 முறை அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதங்கள் எங்கக்கிட்ட இருக்கு”: ட்ரம்ப் பரபரப்பு கருத்து..

trump nuclear

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.


CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் பெரும் அணு ஆயுத களஞ்சியம் இருந்தாலும் “அணு பரிசோதனைகளை நடத்தாத ஒரே நாடாக” இருக்க முடியாது என தெரிவித்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க சில மணி நேரங்களுக்கு முன்பு, டிரம்ப் Truth Social தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, பாதுகாப்புத்துறைக்கு உடனடியாக அணு பரிசோதனைகள் தொடங்க உத்தரவிட்டார். மேலும் “எங்களிடம் உலகிலேயே அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதக் குறைப்பைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதைப்பற்றி புடின் மற்றும் ஷியுடனும் பேசியுள்ளேன். உலகத்தை 150 முறை அழிக்கக் கூடிய அளவு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. ரஷ்யாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன; சீனாவும் அதே பாதையில் செல்கிறது,” என்று கூறினார்..

தொடர்ந்து பேசிய ட்ரம்ப் “ “ரஷ்யா பரிசோதனை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. வடகொரியா அடிக்கடி பரிசோதனை செய்கிறது. மற்ற நாடுகளும் செய்கின்றன. நாம்தான் செய்யவில்லை. நாமே மட்டும் செய்யாமல் இருக்கக் கூடாது,” என்று கூறினார்..

இந்தப் பதிவுக்கு முன்னதாக ரஷ்யா தனது “வரம்பற்ற தூரம் பறக்கும்” Burevestnik ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

அமெரிக்கா “திறந்த சமூகம்” என்பதால் இத்தகைய விஷயங்களை வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.

“நாம் வேறுபட்ட நாடு. நாங்கள் இதைப் பற்றி திறந்தவெளியில் பேசுகிறோம். இல்லையெனில், நீங்கள் இதைப் பற்றி செய்தி வெளியிட மாட்டீர்கள். அவர்கள் (சீனா, ரஷ்யா) செய்தியாளர்களே எழுத மாட்டார்கள். ஆனால் நாங்கள் செய்கிறோம்,” என்று கூறினார்..

30 ஆண்டுகளுக்கு பிறகு அணு பரிசோதனைகளை மீண்டும் தொடங்கும் ட்ரம்பின் அழைப்பு, அமெரிக்க காங்கிரஸில் சந்தேகத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க ஸ்ட்ராட்டஜிக் கமாண்டின் (STRATCOM) தலைவராக நியமிக்கப்பட்ட ரிச்சர்ட் கொர்ரெல், சீனாவோ ரஷ்யாவோ அணு வெடிப்பு பரிசோதனை ஒன்றும் சமீபத்தில் நடத்தியதில்லை என நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளார். மேலும்
சமமாக அணு பரிசோதனைகளை தொடங்குவோம்’ என்பது ட்ரம்பின் கருத்தாக இருந்தது… ஆனால் சீனாவோ ரஷ்யாவோ எந்த அணு வெடிப்பு பரிசோதனையும் செய்யவில்லை. அதனால் அதைப் பற்றி நான் எதையும் ஊகிக்கவில்லை,” என்று கொர்ரெல் கூறினார்.

Read More : “நேபாளத்தில் என்ன நடந்தது என பார்த்தீர்கள் தானே..” சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்..!

RUPA

Next Post

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ.. நவ.6 ல் அனைத்துக் கட்சி கூட்டம்..! தமிழக அரசு அறிவிப்பு..!

Mon Nov 3 , 2025
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் […]
Tn Govt 2025

You May Like