பிரபல குணச்சித்திர நடிகர் ஜீவா ரவி இன்று ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் விரைவில் இணையப் போவதாக தெரிவித்தார்.. மேலும் “ நான் தற்போது உயிரோடு இருப்பதற்கு காரணமே செங்கோட்டையன் தான்.. எனவே தவெகவில் இணைந்த செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து சொல்ல வந்தேன்..
மரியாதை நிமித்தமாக செங்கோட்டயனை சந்தித்தேன்.. நானும் விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்.. அது நாளை கூட நடக்கலாம்.. அல்லது அடுத்த மாதம் ஆகலாம்.. எதுவுமே நமது கையில் இல்லை.. விரைவில் செங்கோட்டையனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.. எங்கள் ஊரைப் பொறுத்த வரை செங்கோட்டையன் ஒரு காட் ஃபாதர் மாதிரி..
அவர் எந்த பாதையில் செல்கிறாரோ அதே பாதையில் நாங்களும் செல்ல தயாராக இருக்கிறோம்.. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது எனது அப்பா சேர்ந்தது மாதிரி.. விஜய் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரின் துணிச்சல் மற்றும் பேச்சு பிடிக்கும்.. மக்களுக்கு நல்லது செய்யும் முடிவோடு அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.. நல்ல மனிதருக்கு நல்லதே நடக்கும்.. விஜய் சாரோட நான் நடித்திருக்கிறேன்.. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பார்.. அதை செய்வார் என்று நம்புகிறேன்.. நல்லது யார் செய்தாலும் அங்கு நாம் இருப்போம்.. நமக்கு ஒரு நல்ல தலைவர் கண்டிப்பாக வேண்டும் ” என்று தெரிவித்தார்..
Read More : மதுரை புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியர் பெயர் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!



