தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. நடிகராக மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர், அரசியலில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.. புரட்சி தலைவர் என்ற பெயர் பெற்ற எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை வழங்குவோம் என்று இன்றும் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்..
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியும் வருகின்றனர்..
இந்த நிலையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : Flash : காணும் பொங்கல் நாளில் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..! ஒரே நாளில் ரூ.4,000 உயர்வு..!



