தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்! கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்! செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக!
நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்திடுக! கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்காமல், ரூ.3548.22 கோடி சமக்ர சிக்ஷா நிதியை விடுவித்திடுக! நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது! இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்! உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபப்ட்டன..
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை – தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!



