பலியான அரசுப் பள்ளி மாணவன் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்போம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!

anbil mahesh

திருவள்ளூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்..

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..


இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் மாணவன் மோகித் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் தெரிவிதிதுள்ளார்.. உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், அவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்..

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மாணவன் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.. கட்டிடம் மோசமாக உள்ளதால் அங்கு யாரும் செல்லக்கூடாது என கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது.. குறிப்பிட்ட பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது எனக் கூறியும் மாணவன் சென்ற போது எதிர்பாராத விதமாக விபந்து நடந்துள்ளது.. இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.. விசாரணை நடந்து வருகிறது..

2014-ம் ஆண்டு நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தான் நேற்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.. இழப்பீடாக மாணவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை. மாணவன் குடும்பத்தினர் என்னென்ன கோரிக்கை வைக்கிறார்களோ அதனை முதல்வரிடம் கொண்டு செல்வது எனது கடமை.. பலியான மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் செய்யப்படும், அவர்கள் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்போம்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக உயிரிழந்த மாணவன் உடலை வாங்க அவரின் குடும்பத்தினர் மறுத்தனர்.. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கக் கோரியும், ரூ.1 கோடி நிவாரணம் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More : விஜய் பரப்புரை முன்னிட்டு நாளை ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு விடுமுறை…! அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு…!

English Summary

School Education Minister Anbil Mahesh has given an explanation regarding the incident in which a student died after a wall collapsed at a government high school in Thiruvallur.

RUPA

Next Post

மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு வரவில்லையா..? உடனே இத செய்ங்க..!

Wed Dec 17 , 2025
Haven't you received your women's rights payment? Do this immediately!
magalir thoga3 1694054771 down 1750124150 1

You May Like