டெல்லியை சேர்ந்த இதய நிபுணர் டாக்டர் ஷைலேஷ் சிங்கின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில் “பிரியாணிக்காக ஒரு மணி நேரம் வரிசையில் நிற்போம், தோசைக்காக 50 கிலோமீட்டர் காரில் போவோம், ஆனால் நமது இதயத்திற்காக 20 நிமிடம் நடக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் “திங்கட்கிழமையிலிருந்து தொடங்குவேன்” என்ற காரணம் கூறும் பழக்கம், உடல் நலத்தைப் புறக்கணிக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு பதிவில், அவர் “கல்லூரி கிரிக்கெட் நாட்களில் விளையாடினேன்” என்று பெருமை பேசும் சிலரை நகைச்சுவையாக விமர்சித்தார் — “இப்போது பந்து வீசும்போது தசை இழுக்கிறது, ஆனால் அந்தப் பெருமை குழந்தைகளுக்கு மதிப்பில்லை; அவர்களுக்கு இன்றைய உடல்நலமே மதிப்பு,” எனக் குறிப்பிட்டார்.
மேலும் “லிஃப்ட் வரும் வரை 5 நிமிடம் காத்திருப்பதை விட இரண்டு மாடி ஏறினால் உங்கள் இதயம் நன்றாக வேலை செய்யும்” என்று நினைவூட்டினார்.
மேலும் “திங்கட்கிழமை தொடங்குவேன்” என்ற எண்ணம் உடற்பயிற்சியில் தொடர்ச்சியைக் கொல்லும் பழக்கம் என்று எச்சரித்தார். “ஒவ்வொரு முறையும் பயிற்சியை ஒத்தி வைக்கும் போதும், உங்கள் மூளை ‘இன்று உடல்நலம் முக்கியமல்ல’ என்று நம்பத் தொடங்குகிறது,” என்று அவர் கூறினார்.
திருமணத்தை முன்னிட்டு உடல் எடையை குறைப்பேன் என உறுதி கூறும் பலரையும் அவர் சாடினார் — “அவர்கள் இறுதியில் பெரிய ஷெர்வானி வாங்கி, புகைப்படக்காரரை ‘நல்ல கோணத்தில்’ படம் எடுக்கச் சொல்வார்கள்; ஆனால் உண்மையில் அந்த நல்ல கோணம் இனி இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் சிங்கின் கருத்துகள், சமூக ஊடகங்களில் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, “உண்மையான உடல்நலம் என்பது ஜிம்மிலும், டயட்டிலும் அல்ல.. தினசரி சிறிய மாற்றங்களில்தான்” என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளன.
மருத்துவ ஆலோசனை குறித்து பேசும்போது, டெல்லி இதய நிபுணர் டாக்டர் ஷைலேஷ் சிங் மிகவும் தெளிவாகச் சொன்னார் “நடக்காமல் இருக்க இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லும் மருத்துவர் ஒருவரும் இல்லை; அப்படியொரு மாத்திரை உலகத்தில் கிடையாது.
உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்ற பொதுவான காரணத்தையும் அவர் சாடினார் — “மனிதர்கள் தங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை அவர்கள் மருத்துவமனை படுக்கையில் சேர்ந்த பிறகுதான் உணர்கிறார்கள்” என்று கூறினார்..
“வீட்டு உணவு ஆரோக்கியமானது” என்பது உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.. “எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள், நெய் நிறைந்த சப்பாத்திகள், இரவு நேர கனமான உணவுகள் — இவை ‘அம்மாவின் அன்பு’ ஆக இருக்கலாம், ஆனால் உங்கள் அர்ட்டரிகளை (arteries) சுத்தமாக வைத்திருக்காது,” என்று எச்சரித்தார்.
மேலும், “பிரியாணிக்காக வரிசையில் நிற்க நேரம் உண்டு, தோசைக்காக மைல்கள் தாண்டி செல்ல நேரம் உண்டு..ஆனால் இதயத்திற்காக சில நிமிடங்கள் கூட இல்லை. முன்னுரிமைகள் தலைகீழாகியுள்ளன, ஆனால் உங்கள் இதய நரம்புகள் அதை அமைதியாகக் கவனித்து கொண்டிருக்கின்றன,” என்று கூறினார்.
இதனிடையே, அப்பல்லோ நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார் சமீபத்தில் பகிர்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவுரை கவனத்தை பெற்றது. அவர் தனது பதிவில் “உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது, உடல் நலத்தை பெரிதும் மேம்படுத்தும்… 3 நிமிட சிறிய நடைபயிற்சியும் ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், மெட்டபாலிசம், மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்தி, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கும்..” எனக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் 5–10 நிமிடங்கள் நடக்கவும், ஒவ்வொரு மணிநேரத்திலும் சிறிது நேரம் நகரவும்.. உணவுக்குப் பிறகு நடப்பது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும் உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவுகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…
Read More : வாசனை திரவியம், மொபைல் போன்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆராய்ச்சி என்ன சொல்கிறது?



