தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது..
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை மையம் தகவவல் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தமிழகம் – புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிக்கு இணையாக வடக்கு நோக்கி நகர வாய்ப்பு என்று வானிலை மையம் கணித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது..
இது கடலூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு 200 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த் காற்றழுத்தம் நிலவுகிறது.. இது கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. இந்த மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், டிச.3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அப்டேட்டை வழங்கி உள்ளார்.. அவர் “ காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (டிட்வா) சென்னைக்கு அருகில் நகர்ந்து சென்னை கடற்கரையில் கிட்டத்தட்ட 2 நாட்கள் நீடிக்கும். எனவே அடுத்த 2 நாட்களில் இந்த வகையான மழையை மாறுபடும் தீவிரத்தில் எதிர்பார்க்கலாம்.
அடுத்த 24 மணி நேரம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையில் நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால், சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, தீவிரம் அதிகரிக்கும்.
மிதமான மழை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் உள்வரும் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அருகில் இருக்கும் வரை, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மிக கனமழை: இல்லை
அதிக மழை: இல்லை
இவ்வாறு அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்..
Read More : Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?



