தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு.. இன்று கூட்டணியை அறிவிக்கிறார் விஜய்..? பரபரக்கும் அரசியல் களம்..

24 67208f1b7fd84

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது.


500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது. மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாக தெரிகிறது. இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும் நிலையில், விஜய் இதுவரை கூட்டணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்றைய மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read more: 70 கிலோ எடை உள்ளவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..? – நிபுணர்கள் விளக்கம்

English Summary

Weedy TVK conference: Vijay to announce alliance today..?

Next Post

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறு உயர்வு.. ஷாக்கில் நகைப்பிரியர்கள்..

Thu Aug 21 , 2025
2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]
gold coins gold jewellery floor background 181203 24090 1

You May Like