PRADA என்பது, ஓர் இத்தாலிய நவநாகரிக பிராண்ட் ஆகும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடம்பரப் பொருட்களை (உடனடியாக அணியும் உடை, தோல் பொருட்கள், காலணி, பெட்டி மற்றும் தொப்பி) தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும், இது மரியோ பிராடா அவர்களால் உருவாக்கப்பட்டது.
அந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டில் மரியோ பிராடா மற்றும் அவருடைய சகோதரர் மார்டினோ[2] அவர்களால் ஒரு தோல்பொருள் விற்பனைக் கடையாக – ஃப்ராடெல்லி பிராடா (ஆங்கிலம்: பிராடா சகோதரர்கள் ) – இத்தாலியின் மிலான்-இல் திறக்கப்பட்டது.[1][3] அந்தக் கடை ஆரம்பத்தில் தோல் பொருட்களை விற்பனை செய்தது மேலும் ஆங்கில ஸ்டீமர் டிரங்க்குகள் மற்றும் கைப் பைகளை இறக்குமதி செய்தது.
இவ்வளவு ஆடம்பர ஃபேஷன் நிறுவனமான பிராடா, பலர் வீட்டு உபயோகத்திற்கான அடிப்படை கருவியாக பயன்படுத்தப்படும் சேப்டி பின் விலை ரூ.69 ஆயிரம் என்று அறிவித்துள்ளது பேசுப்பொருளாகியுள்ளது. சாதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் சேஃப்டி பின், இத்தாலிய சொகுசு பிராண்டான பிராடாவின் கைவண்ணத்தில் ஒரு விலையுயர்ந்த அணிகலனாக மாறியுள்ளது. இந்த சேப்டி பின், ஒரு சாதாரண உலோக ஊசியாக இல்லாமல் நூல்களால் பின்னப்பட்ட அணிகலனாக மாறியுள்ளது. இந்த மெட்டல் சேப்டி பின் ப்ரூச் (Metal Safety Pin Brooch) ஆரஞ்சு, வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் சர்வதேச விலை 775 டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.69,000 ஆகும். இதில் வைரங்களோ அல்லது வேறு எந்த விலைமதிப்புள்ள கற்களோ பதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேஃப்டி பின்னின் விலை இணையத்தில் வெளியானதில் இருந்து, நெட்டிசன்கள் பிராடா நிறுவனத்தை கிண்டல் செய்து வருகின்றனர். வெறும் ரூ.2-க்கு பெட்டிக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு விலையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



