’கூல் சுரேஷ் சொன்னது நடந்துருச்சு’..!! பைக் மீது காரை மோதிய டிடிஎஃப் வாசன்..!! பாய்ந்தது வழக்கு..!!

சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து தற்போது சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் உருவாகும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை கடந்த ஜூன் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மஞ்சள் வீரன் பட விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது பேசிய டிடிஎப் வாசன், தான் பைக் ரைடு சென்றுவிடுவதால், ஒரு சில நேரம் காஷ்மீர்ல இருப்பேன், ஒரு சில நேரம் நாக்பூர்ல இருப்பேன் என்று சொல்லும்போது இடையில் குறுக்கிட்ட கூல் சுரேஷ், ஒரு சில நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பாரு என தக் லைப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோ காட்சி இன்ஸ்டாவில் படு வைரல் ஆனது.

தற்போது அவர் சொன்னபடியே டிடிஎப் வாசன் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை டிடிஎப் வாசன் வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார் டிடிஎப் வாசன். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

CHELLA

Next Post

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை திருநங்கையாக களமிறங்கப்போவது யார் தெரியுமா..? அடடே CWC பிரபலத்தின் மகளா..?

Tue Jul 4 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் 7-வது துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சிலரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே, மாகாபா ஆனந்த் உட்பட சிலரின் பெயர்கள் வெளியாகி இருந்த […]
Shivin BB

You May Like