நம் கனவுகள் எப்போதுமே புதிரானவை. சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும். சில கனவுகள் நம்மை குழப்பி, ஆழமான சிந்தனையிலும் பயத்திலும் வைத்திருக்கும். குறிப்பாக, ஆன்மீகம் தொடர்பான கனவுகள் வந்தால், அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்வதில், நம்மில் பலரும் ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில், அழகு, ஆன்மீகம் மற்றும் கடவுள் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்..? இது நல்ல சகுனமா..? அல்லது எச்சரிக்கையா..?. இந்தப் பதிவில் அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மயில் ஆடுவது போல் கனவு வந்தால்..
ஒரு மயில் உங்கள் கனவில் ஆடிக் குதிக்கும் படி வந்தால், இது ஒரு மகிழ்ச்சியான சகுனம். கனவு சாஸ்திரத்தின்படி, இது உங்கள் வாழ்க்கையில் விரைவில் நிறைவேறப் போகும் சுபநிகழ்வுகளின் அறிகுறிகள் ஆகும். அதாவது, திருமணம், குழந்தைப் பிறப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள், கலை, இசை, படைப்பு துறைகளில் புதிய முன்னேற்றம் ஆகிய நன்மைகளை இந்த கனவு குறிக்கிறது.
மயில் இறகு தோன்றினால்..
உங்கள் கனவில் மயிலிறகு வந்தால், ஒரு தெய்வீக பாதுகாப்பும், ஞானத்தின் அறிகுறியும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்வில் நடக்கவுள்ள முடிவுகள் சிறப்பாக அமையும் என்று அர்த்தம். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளில் இருந்து தப்பித்து முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்பது தான் இதற்கு அர்த்தம்.
எச்சரிக்கும் கனவுகள்..
அனைத்து கனவுகளும் நல்ல சகுனமாக கருதக் கூடாது. மயில் காயமடைந்திருப்பது, சோர்வடைந்த நிலையில் இருப்பது போன்ற கனவுகள் வந்தாலோ அல்லது இறந்துபோன மயில் போன்ற காட்சிகள் வந்தாலோ உங்கள் வாழ்க்கையில் சில சவால்கள் அல்லது குழப்பங்களை குறிப்பதாகும். இது உடல் நலத்தில் பாதிப்பு, மன உளைச்சல் அல்லது ஒரு முக்கிய முடிவில் ஏற்பட்ட தடுமாற்றம் ஆகியவற்றை குறிக்கும் அறிகுறிகளாகும். ஆனால் கவலைப்படத் தேவையில்லை. இதுபோன்ற கனவுகள் பெரும்பாலும் குறைவாகவே நிகழும்.
Read More : கோயிலில் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா..? எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும்..? இது பலருக்கும் தெரியாது..!!



