டி-சர்ட்டுகள் (T-shirts) அன்றாட ஃபேஷனில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் டி-சர்டுகளை அணிகிறார்கள். இலகுவாகவும், வசதியாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருப்பதால் பலரும் டி-சர்ட்டுகளை விரும்பி அணிகின்றனர்..
ஆனால் T-shirts-ல் உள்ள ‘T’ உண்மையில் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோருக்கு சட்டை என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ‘T’ க்குப் பின்னால் உள்ள அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை.. சுவாரஸ்யமாக, அதன் பின்னால் இரண்டு பிரபலமான கோட்பாடுகள் உள்ளன.
ஃபேஷன் நிபுணர்களின் கூற்றுப்படி, டி-சர்ட் தயாரிக்க மிகவும் எளிமையான ஆடைகளில் ஒன்றாகும். இதற்கு காலர் இல்லை, நேரான ஸ்லீவ்கள் உள்ளன. மேலும் பொதுவாக நேரான வெட்டில் உடலுக்கு பொருந்துகிறது. தட்டையாக வைக்கப்படும் போது, ஆடையின் வடிவம் ‘T’ எழுத்தை ஒத்திருக்கிறது, எனவே ‘T-சர்ட்’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், மற்றொரு விளக்கமும் உள்ளது. முதல் உலகப் போரின் போது, அமெரிக்க வீரர்கள் தங்கள் பயிற்சி அமர்வுகளின் போது இலகுரக, வசதியான சட்டைகளை அணிந்தனர். இவை முதலில் Training Shirts’ அதாவது ‘பயிற்சி சட்டைகள்’ என்று அழைக்கப்பட்டன, காலப்போக்கில், அவை ‘டி-சர்ட்கள்’ என்று சுருக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
நாம் மிகவும் சாதாரணமாக அணியும் ஒரு ஆடை இவ்வளவு சுவாரஸ்யமான கதையை கொண்டுள்ளது என்பதே ஆச்சர்யமான விஷயம் தான்.. உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் அணியும் பல ஆடைகளுக்குப் பின்னால் கவர்ச்சிகரமான கதைகள் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
Read More : ஆம்லெட் vs வேகவைத்த முட்டை: வெயிட் லாஸ்க்கு எது சிறந்தது? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!