மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பேசிய விஜய் “ ஒரு சிங்கம் எப்போதுமே தனித்துவமானது.. ஒருமுறை சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசைகளும் அதிரும்.. அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும்.. வேடிக்கை பார்க்க வெளியே வராது.. எவ்வளவு பசியாக இருந்தாலும் உயிரற்ற விலங்குகளை சிங்கம் எப்போதும் வேட்டையாடாது..
வேட்டையாடும் போது கூட தன்னை விட பெரிய மிருகங்களை மட்டும் குறித்து தாக்கும்.. அப்படிப்பட்ட அந்த சிங்கம் அவ்வளவு ஈஸியா எதையும் தொடாது.. அப்படி தொட்டால் விடாது.. சிங்கத்திற்கு கூட்டத்துடன் இருக்கவும் தெரியும்.. தனியாக இருக்கவும் தெரியும்.. அஞ்சாமல் தனியாக வந்து அனைத்திற்கும் தண்ணிக்கட்டும்.. ஒரு சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்..
என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் அம்மாக்கள், அண்ணன், தம்பிகள் அனைவருக்கும் என் உயிர் வணக்கம்..
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கும் வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வைகை ஆறு, அழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் எல்லாமே தான்.. உணர்வுப்பூர்வமான மகக்ள் இங்கு வாழ்கின்றனர்.. எம்.ஜி.ஆரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் அவரின் குணம் கொண்ட புரட்சி கலைஞர், கேப்டன், எனது அண்ணன் விஜய்காந்துடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்லும் மாநாடு தான் இந்த மாநாடு..
தவெகவின் முதல் மாநாட்டுக்கு பிறகு நமக்கு எதிராக எத்தனை குரல்கள் வந்தது.. அவற்றை சிறிய சிரிப்புடன் கடந்து வந்துள்ளோம்.. சினிமா என்ற கலை ஆயுதம் வாயிலாக சாதி, மதம் இனம் கடந்து ஒவ்வொரு மனிதனுக்காக ஒலிக்கும் உரிமைக் குரல்.. மாநில உரிமை, சமூக நீதி, பெண்கள் உரிமைக்காக, மதச்சார்பின்மைக்காக ஒலிக்கும் குரல்.. இந்த குரல் ஒருபோதும் ஓயாது..
இவர் எல்லாம் எங்கு கட்சி தொடங்கப் போகிறார்? இவர் எப்படி மாநாட்டை நடத்தப் போகிறார் என்றார்கள்? இப்போது விஜய் ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக எப்படி ஆட்சியை பிடிக்கப் போகிறார் என்கிறார்கள்? இந்த கூட்டம் வெறும் ஓட்டாக மட்டுமல்ல, வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போற வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கப்போகிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்..” என்று தெரிவித்தார்..