பிரபல நகைச்சுவை நடிகரும் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளருமான தாடி பாலாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ‘Realone Media’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாடி பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவரது உதவும் குணம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
தாடி பாலாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஒரு மாதமாக சிகிச்சையில் இருக்கிறார் என்றும் சேகுவேரா உறுதிப்படுத்தினார். “வயிற்று வலி மற்றும் குடலில் சில பிரச்சனைகளுக்காகவே சிகிச்சை எடுத்து வருகிறேன். எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. சீக்கிரமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவேன்” என்று தாடி பாலாஜி நம்பிக்கையுடன் தெரிவித்ததாக சேகுவேரா கூறியுள்ளார்.
இது மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனையா என்று சேகுவேரா கேட்டதற்கு, “கடந்த 2 ஆண்டுகளாக மது பழக்கமே இல்லை; இந்த குடல் பிரச்சனைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்று பாலாஜி மறுத்துள்ளார். மேலும், குடும்பப் பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு வரவில்லை என்றும், உடல்நலக் குறைவு என்பது எல்லோருக்கும் வரக்கூடியதுதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
விஜய்யின் விசுவாசியான தாடி பாலாஜி, மருத்துவமனையில் இருந்தபடியே விஜய்க்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளதாகவும் தவெக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக, தாடி பாலாஜி தற்போது சிகிச்சையில் இருந்தாலும் சீரியஸான நிலையில் இல்லை; நன்றாகவே பேசினார் என்றும் பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Read More : ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Bosch நிறுவனம்..!! 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு..!!



