உலகப் பொருளாதார நிலை மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலையில் நேற்று (அக்டோபர் 24) மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டிருந்த தங்கத்தின் விலை, மாலையில் திடீரென சரிவை சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 75 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.6,586) அளவுக்குத் தங்கம் விலை குறைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலையானது 16 டாலர்கள் சரிந்து $4,113 என்ற அளவில் நீடிக்கிறது. ஒட்டுமொத்தமாக, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்தத் திடீர் விலை வீழ்ச்சியானது இந்தியச் சந்தையிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 7 நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பிடத்தக்கது. 7 நாட்களுக்குள் மட்டும், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) ரூ.6,400 வரை குறைந்திருக்கிறது. உலகச் சந்தையின் இந்த சரிவு நீடித்தால், இந்தியப் பண்டிகை மற்றும் திருமணக் காலங்களில் தங்கம் வாங்குவோருக்கு இது மேலும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : தங்கமும் இல்ல.. வெள்ளியும் இல்ல..!! அடுத்த சில ஆண்டுகளில் இந்த உலோகத்திற்கு தான் மவுசு அதிகம்..!!



