பணத்தைப் போல தூக்கத்தையும் சேமிக்க முடியும்..!! ஆமா.. அது என்ன SLEEP BANKING..? – நிபுணர் விளக்கம்

Sleep1

தேர்வுக்காக அல்லது வேலைக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கலாம். அல்லது நீங்கள் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் தூங்காமல் இருக்கலாம். இப்படி எந்த காரணம் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுவான விளைவு நிகழும். இதனால் உங்கள் உடல் சோர்ந்து போகும், மூளை சீராக செயல்படாது, மனநிலை மோசமாகி, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும்.


நீண்ட பயணத்திற்கு போகும் முன் நம் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்வதுபோல், நாம் தூக்கத்தையும் முன்கூட்டியே சேமித்து வைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம் உண்மைதான். இதற்கு பெயர் தான் தூக்க வங்கி.

தூக்க வங்கி என்றால் என்ன? தூக்க வங்கி என்பது தூக்கமின்மையை சமாளிக்க, அதற்கும் முன்பாக தூக்கம் எடுக்கும் ஒரு அறிவியல் ஆதாரமுள்ள முறையாகும். உதாரணமாக தேர்வு, இரவு வேலை, குழந்தையின் கவலை, அல்லது பயண நாட்களில் தூக்கம் குறையும் எனத் தெரிந்தால், அதற்கு முன்பாக சில நாட்கள் ஒவ்வொரு நாளும் கூடுதலாக (60–90 நிமிடங்கள்) தூங்கினால், மூளை மற்றும் உடல் தூக்கக் குறைவால் ஏற்படும் சோர்வை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்.

தூக்கம் என்பது முன்கூட்டியே சேமிக்க முடியாத ஒரு செயலாக இருந்தாலும், முந்தைய நாட்களில் அதிக தூக்கம் எடுத்தால், நினைவு, கவனம், உணர்ச்சி கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மேம்படும். விஞ்ஞானிகள் இதை முன்னெச்சரிக்கையாக செயல்படும் உத்தி எனக் கருதுகிறார்கள்.

இதை எப்படி நடைமுறைப்படுத்தலாம்? தூக்க குறையும் நாட்களை முன்கூட்டியே அடையாளம் காணுங்கள். உதாரணமாக, இரவு வேலை, பயணம், தேர்வு போன்ற சூழ்நிலைகள். அதற்கு முன்பாக 3–7 நாட்கள், ஒவ்வொரு இரவும் 1 மணி நேரம் கூடுதலாக தூங்குங்கள். பகல் நேரங்களில் 20–30 நிமிடம் தூங்குவதும் பயனளிக்கும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது: தூக்க வங்கி ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.
இது நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற நீண்டகால விளைவுகளைத் தடுப்பதில்லை. தொடர்ந்து தூக்க வங்கியைப் போல் செயல்படுவது உங்கள் உடலின் உள் கடிகாரத்தை (circadian rhythm) பாதிக்கக்கூடும்.

நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவ நிபுணர் அருண் சௌத்ரி கூறுகையில், “தூக்கம் என்பது கடனல்ல. ஆனால், இழப்பதற்கு முன்பாக சிறிது கூடுதலாகச் சேமித்தால், அதன் கஷ்டமான விளைவுகளைச் சமாளிக்க முடியும்,” என்றார். தூக்க வங்கி என்பது, எதிர்கால தூக்க குறைவுக்கான ஒரு சிறந்த உத்தி. ஆனால், ஒவ்வொரு நாளும் நல்ல தூக்கம் வாங்குவதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூக்கம் என்பது ஒரு விருப்பம் அல்ல. அது உங்கள் உடலின் அடிப்படை தேவையாகும்.

Read more: பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்..? லிஸ்டில் இருப்பது இவங்க 3 பேரு தான்..

Next Post

“லேட் பண்ணாதீங்க.. ரொம்ப சிக்கல்”..!! “கூட்டணியை உடனே அறிவியுங்கள்”..!! தேமுதிகவுக்கு கெடு விதித்த பாஜக..?

Sat Jun 7 , 2025
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]
Premalatha 2025

You May Like