உங்கள் கனவில் பணம் வந்தால் என்ன பலன்..? ஜோதிடம், உளவியல் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்..!!

Dreem Money 2025

தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நிகழும் கனவுகள், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக ஒரு குறும்படம் போல 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கனவுகள் எதனால் ஏற்படுகின்றன என்று தத்துவவியல் மற்றும் மனோவியலின் மூலமாக நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்தாலும், தற்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


இந்த கனவுகளில் தோன்றும் குறியீடுகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவை நமக்கு நன்மையா அல்லது தீமையா என்று அறிந்துகொள்ள நாம் முயல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பொதுவான கனவுதான் பணம் வருவது அல்லது பணம் இழப்பது ஆகும்.

கனவில் பணம் வந்தால் என்ன அர்த்தம்..?

நம்முடைய தற்போதைய மனநிலை, சிந்தனை மற்றும் வாழ்க்கை சூழல் ஆகியவற்றைச் சார்ந்தே கனவுகள் ஏற்படுகின்றன. கனவில் நீங்கள் பணம் சேர்ப்பதை காண்கிறீர்களா அல்லது பணத்தை இழப்பதை பார்க்கிறீர்களா என்பதே அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது.

ஜோதிடவியலின்படி, கனவில் பணம் வருவது என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் அடையப்போகும் வெற்றியுடனும், இலக்குகளை அடைவதுடனும் தொடர்புடையது. இது வாழ்வில் ஏற்படப்போகும் நேர்மறையான மாற்றம் அல்லது புதிய வாய்ப்பு ஆகியவற்றைக் குறிக்கலாம். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பொருளாதார உயர்வு அல்லது மாற்றத்தின் குறியீடாகப் பணம் தோன்றலாம்.

ஜோதிடப்படி, கனவில் பணம் வருவதை வியாழன் மற்றும் வெள்ளிக் கிரகங்களுடன் ஒப்பிட்டு, செல்வம் மட்டுமல்ல, விரும்பிய இலக்கை அடையப்போவதையும் இது குறிக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாறாக, பணத்தை இழப்பது போலக் கனவு கண்டால், நீங்கள் எடுக்கப்போகும் தவறான முடிவுகளையோ அல்லது வாழ்வில் கிடைத்த நல்ல வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதையோ குறிக்கலாம்.

உளவியலின்படி, கனவில் வரும் பணம் என்பது எப்போதும் செல்வத்தையோ அல்லது பொருட்செல்வத்தையோ குறிக்க வேண்டியதில்லை. இது ஒருவருக்குக் கிடைக்கப்போகும் பாராட்டு, மரியாதை அல்லது அவருடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கூடக் குறிக்கலாம். அதே நேரத்தில், கனவில் பணத்தை இழப்பது போலக் கண்டால், அது ஒருவரின் மனதில் உள்ள சுமை, பாதுகாப்பின்மை உணர்வு அல்லது நிஜ வாழ்வில் உள்ள பொருளாதார தேக்கத்தை குறிக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம்.

Read More : FLASH | கொட்டித் தீர்க்கும் கனமழை..!! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!!

CHELLA

Next Post

பாதாம் நல்லது தான்.. ஆனால் இந்த உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிட்டால் டேஞ்சர்..!! கவனமா இருங்க..

Thu Nov 6 , 2025
People with these health problems should not eat almonds.
almonds 11zon

You May Like