திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.. மேலும் “ தமிழ்நாட்டின் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.. திமுக நிர்வாகிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.. திமுக நிர்வாகிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமான சுற்றித்திரிந்து வாழ்கிறார்கள்..
சிறுமியை கூட விட்டுவைக்காத திமுக சேர்ந்த நபரின் மோசமான செய்தியை நாம் பார்த்தோம்.. நான் வாக்குறுதி அளிக்கிறேன்.. நமது ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. என்.டி.ஏ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முறையாக இருக்கும்.. என்.டி.ஏ ஆட்சியில் குற்றவாளிகள் தான் அச்சத்துடன் இருப்பார்கள், மக்கள் அல்ல..
மேற்காசிய போர் காரணமாக எரிசக்தி சங்கிலி தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முதன்மை என்ற கொள்கையில் நாம் நம்பிக்கை வைத்துள்ளது.. நமது அரசு இந்தியர்களின் நலனுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது.. யாரும் பயப்பட தேவையில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. சரியான தகவல்களை மட்டுமே பரப்ப வேண்டும்.. இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பதை கோவிட் காலத்தில் நிரூபித்து காட்டினோம்.
வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியமான தேர்தல்.. மக்கள் முன்பு இருக்கும் தேர்வு தெளிவாக இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சி, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என ஒரு பாதை.. வளர்ச்சி வாய்ப்பு, நாணயமான ஆளுகை ஆகியவற்றை நோக்கி இன்னொரு பாதை அழைத்து செல்கிறது.. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்கும்.. திருச்சி மக்களே உங்கள் குரல் மாநிலம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.. தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது.. தமிழ்நாடு என்.டி.ஏவை விரும்புகிறது என்பது தான் அது..” என்று தெரிவித்தார்..


