கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின்படி காரணங்கள் பின்வருமாறு..
முக்கிய காரணங்கள்:
* தவெக தலைவர் விஜய் 12.45க்கு கரூரில் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் 5 மணி நேர தாமதமாக மாலை 6 மணிக்கே வந்தார்.
* காலை 8.15க்கு நாமக்கல்லில் கூட்டம் நடத்த வேண்டிய நிலையில், வீட்டில் இருந்தே தாமதமாக கிளம்பினார்.
* விஜய் வாகனத்தில் கண்ணாடியை இறக்காமல் வந்ததால், ரசிகர்கள் அவரை பார்க்க வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர். இதுவே கூட்ட நெரிசலை அதிகரித்தது.
* 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர்.
* கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை.அடிப்படை வசதிகள் இல்லாமல் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது.
* குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது. ஆரம்பத்தில், லெஃட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இந்த இரண்டு இடங்களும் குறைந்த பரப்பளவு கொண்டது, ஏற்கெனவே கடந்த பரப்புரையில் கூட்டம் அதிகமாகக் கூடியதைக் கருத்தில் கொண்டு போதாது என்று போலீசார் முன்னெச்சரிக்கை தெரிவித்தனர்.
* அதற்குப்பின், வேலுச்சாமிபுரம் இடம் கொடுக்கப்பட்டது, ஆனால் தொண்டர்கள் சரியாக கூட்டத்தை கையாளாததால், நினைத்ததை விட அதிக கூட்டம் திரண்டது. இதுவே கரூர் துயரத்துக்கான முக்கிய காரணமாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
Read more: Flash: “39 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட சதி” உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக முறையீடு..!!