இசை, பாடல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த உலகத்தில் பல வகையான இசை உள்ளது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கின்றன. சில பாடல்கள் சந்தோஷத்தை கொடுக்கும். சில பாடல்கள் அமைதியை கொடுக்கும், சில பாடல்கள் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒரு பாடல் தற்கொலை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தப் பாடலை தடை செய்ததையும், அதன்பின்னணியில் பாடலின் இசையமைப்பாளர் சந்தித்த சம்பவங்களும் இந்தத் தொகுப்பு.
தற்கொலை உணர்வை தூண்டும் அளவுக்கு துக்கமான இந்தப் பாடலை, 1933-ல் ஐரோப்பாவின் ஹங்கேரியைச் சேர்ந்த பியானோ கலைஞரும் இசையமைப்பாளருமான ரெஸ்ஸோ செரெஸ் (Rezső Seress) இசையமைத்து வெளியிட்டார். இந்தப் பாடல் உருவாக்கத்தில் ரெஸ்ஸோ செரெஸ் சந்தித்த பின்னணிகள் உள்ளன. ரெஸ்ஸோ செரெஸ், பல வருடங்களாக கடினமாக உழைத்தாலும் இசை வாழ்க்கையில் பெரிய பெயரை பெற முடியவில்லை.
அந்த நேரத்தில், காதலித்த பெண்ணும் தன்னை விட்டுச் செல்ல, சோகத்தின் உச்சிக்கே சென்ற ரெஸ்ஸோ செரெஸ் தனது பியானோ இசையைக் கொண்டு “Gloomy Sunday” என்கிற பாடலை உருவாக்கினார். “Gloomy Sunday” என்றால் தமிழில் இருண்ட ஞாயிறு என்று அர்த்தம். இந்தப் பாடல் வரிகளில் தான் சாவுக்கு ஏங்குவது போலவும், உயிரிழந்த பின் சொர்க்கத்தில் தனது காதலியுடன் சேர்வது போலவும் அமைத்திருந்தார் பாடல் வரிகளை எழுதிய லாஸ்லோ ஜாவோர் (László Jávor) என்பவர்.
உலகின் மிக மோசமான பாடல் எது? இந்தப் பாடல், மக்கள் இதைக் கேட்டவுடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தது. ஹவுஸ் ஸ்டஃப் ஒர்க் வலைத்தளத்தின்படி, க்ளூமி சண்டே பாடல் உலகின் மிக மோசமான பாடல். இந்தப் பாடலை ரெஸ்ஸோ செரெஸ் மற்றும் லாஸ்லோ இணைந்து எழுதியுள்ளனர். 1933 இல் எழுதப்பட்ட இந்தப் பாடல் 1935 இல் வெளியிடப்பட்டது, அதே ஆண்டில், இதைக் கேட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நபர் தனது தற்கொலைக் குறிப்பில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்தப் பாடலை எழுதியவரின் வருங்கால மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில், இந்தப் பாடலை எழுதிய ரெஸ்ஸோவும் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு பேர் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டனர், மேலும் ஒரு பெண் பாடலைக் கேட்ட பிறகு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்திற்கும் பிறகு, இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டது.
உலக அளவில் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100-க்கும் மேற்பட்டோர் இந்தப் பாடலை கேட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஹங்கேரியின் தற்கொலை பாடல் என்றே இந்தப் பாடல் அழைக்கப்பட்டது. உயிரிழப்புகளால் பல நாடுகள் “Gloomy Sunday” பாடலை தடை செய்தன. ரேடியோவில்கூட பாடலை ஒலிபரப்பவில்லை. இப்படி தற்கொலை செய்திகளும், தடை செய்திகளும் அடுத்தடுத்து வர, விரக்தி அடைந்த இசையமைப்பாளர் ரெஸ்ஸோ செரெஸ் தனது பாடலால் பலரின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று மனம் நொந்து இறுதியில் அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதே பாடலை ரீ கிரியேட் செய்த 3 இசையமைப்பாளர்களும் தற்கொலை செய்தே இறந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
Readmore: இன்று நடைபெறும் TNPSC குரூப் 4 தேர்வு…! தேர்வர்கள் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்…!