விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு..? தாய், தந்தைக்கு கடன் வழங்கியதாக வேட்பு மனுவில் தகவல்..!

vijay nomination

தவெக தலைவர் விஜய்யின் சொத்துவிவரங்கள் அவரின் வேட்பு மனுவில் வெளியாகி உள்ளன.. அதன்படி விஜய் பெயரில் உள்ள அசையும் சொத்து சொத்து ரூ.92 கோடி; மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி உள்ளது.. வெளிநாட்டு சொத்துகள் உட்பட விஜய்க்கு அசையா சொத்து மதிப்பு ரூ.404 கோடி உள்ளது. கையில் ரொக்கமாக ரூ.2 லட்சம் மட்டுமே உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.22.15 கோடி என்று தெரிவித்துள்ளார்.


தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருக்கிறது.. BMW 530, Toyota Lexus, Toyota ellfire, BMW I7, Maruthi Swift உட்பட சுமார் 6 கோடியில் 5 ஆடம்பர கார்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் தனது வேட்புமனுவில் “ கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 2 இடங்களில் விஜய்க்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. போரூர், நீலாங்கரை, சாலிகிராமத்தில் வேளாண் அல்லாத நிலம் உள்ளது. தன் பெயரில் குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் எதுவும் இல்லை.. தன் பெயரில் கடன் எதுவும் இல்லை..

மனைவி சங்கீதாவின் பெயரில் இந்தியன் வங்கி கணக்கில் ரூ.25 கோடி வைப்புத்தொகை உள்ளது. மனைவி சங்கீதாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் ரூ.40 கோடி வைப்புத்தொகை உள்ளது..

சென்னை தி.நகர், சோழிங்கநல்லூர், பாடி, கொப்பூரில் விஜய்க்கு சொந்தமாக வணிக கட்டிடங்கள் உள்ளன.. சென்னை லயோலா கல்லூரியில் B.Sc பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியதாக வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார்..

தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், தந்தை எஸ்.ஏ.சிக்கு ரூ.3.02 கோடி கடனாக கொடுத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சம், மகள் திவ்யா சாஷாவுக்கு ரூ.4.60 லட்சம் கடன் / முன் பணம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சேமிப்பு கணக்கில் ரூ.213.36 கோடி, ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி உள்ளது.

RUPA

Next Post

விமானத்தில் பேய்..! வானில் பறந்த போதே கதவைத் திறக்க முயற்சி..! உண்மையில் என்ன நடந்தது?

Mon Mar 30 , 2026
விமானம் தரையிறங்க இன்னும் சில கணங்களே இருந்தன. பயணிகள் அனைவரும் தங்கள் சீட் பெல்ட்களை இறுக்கிக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தனர். அந்தத் துல்லியமான தருணத்தில், ஒரு பயணியின் செயல், விமானத்தில் பயணித்த 100 பேரின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. சனிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெங்களூரிலிருந்து வாரணாசி சென்ற அந்த இண்டிகோ விமானம், […]
indigo passenger tries to open emergency exit door 1 2

You May Like