“அன்புமணிக்கு நான் என்ன குறை வைத்தேன்.. என்னை துண்டு துண்டாக வெட்டி போட்டிருந்தால்..” பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்..!

anbumani ramadoss

சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்..


நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் அதை செய்யவில்லை. பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தானே நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.. நான் செய்த சத்தியத்தை இன்று வரை காப்பாற்றிக்  கொண்டே இருக்கிறேன்..

என்னை தூற்றுவதற்கு பதிலாக 20-30 துண்டு துண்டாக வெட்டிக் கொன்றிருந்தால் கூட நிம்மதியாக போயிருப்பேன்.. நாள் தோறும் சில்லரை பசங்களை வைத்துக் கொண்டு என்னை காயப்படுத்துகின்றனர்.. 30 ஆண்டாக மக்களுக்காகவும் கட்சிக்காவும் உழைத்த ஜி.கே மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது. தூக்க மாத்திரை விழுங்கினால் கூட தூக்கம் வரவில்லை..

என்னைப் போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்.. எனது பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் வந்த எனது தாயிடம் கூறி அழுததாக அவர் நா தழுக்க தழுக்க கூறினார். நான் வளர்த்த பசங்க இப்படி செய்றாங்க.. அப்போது மேடையில் பேசிய ராமதாஸ் கண்ணீர் சிந்தியதை பார்த்ததும் அழக்கூடாது ஐயா என பாமக தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்தனர்..

தொடர்ந்து பேசிய அவர் அவர் “ கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை.. நான் நினைப்பது போன்ற வெற்றி கிடைக்கும்.. 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி; நல்ல முடிவு எடுப்பேன்..” என்று தெரிவித்தார்..

Read More : விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.. அதிமுக களத்தில் இல்லாத கட்சியா? கொந்தளித்த செல்லூர் ராஜு..!

RUPA

Next Post

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆண்களே, இதை மிஸ் பண்ணிடாதீங்க!

Mon Dec 29 , 2025
பேரீச்சம்பழம் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உணவுகளில் ஒன்றாகும். நல்ல சுவையுடன், இவை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பேரீச்சம்பழத்தில் நமது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் விளைவுகளையும் குறைக்க முடியும். குளிர்காலத்தில் உண்ணும் உணவுப் பொருட்களில் பேரீச்சம்பழத்தைச் சேர்ப்பது நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பருவத்தில் […]
dates 2 1 1

You May Like