மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் முதலில் என்ன செய்வது..? இதை படிங்க.. இனி கஷ்டப்பட மாட்டீங்க..!!

Fish 2025 1

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் உணவாக கருதப்படுகிறது. இதனால்தான், பலர் வாரம் ஒருமுறை மீன் வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இருப்பினும், சிலருக்கு மீனின் முள் தொண்டையில் சிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அந்த உணவைத் தவிர்க்கின்றனர்.


உண்மையில், சற்று கவனக்குறைவாக மீனை சாப்பிடும்போது, அதன் நுண்மையான எலும்புகள் தொண்டையில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது, தற்காலிக வலி, விழுங்குவதில் சிரமம் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், பீதி அடைய வேண்டியதில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள், தொண்டையில் சிக்கிய மீன் முள்களை நேரடியாக தள்ளிவிட உதவும்.

வாழைப்பழம் : பழுத்த வாழைப்பழத்தை மெதுவாகச் சாப்பிட்டு விழுங்குவது. வாழைப்பழத்தின் மென்மையும் வழவழப்பும், தொண்டையில் சிக்கிய முள்ளை தள்ளி, அந்த இடத்திலிருந்து கீழே நகர்த்த உதவுகிறது.

சாதம் : வெள்ளை சாதத்தை உருட்டி, மெதுவாக விழுங்குவது அல்லது உலர்ந்த ரொட்டியை சிறிது தண்ணீருடன் விழுங்குவதும் ஒரு நல்ல மாற்று. உணவின் அழுத்தம், முள்ளை தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் தள்ளும்.

தேன் : ஒரு ஸ்பூன் தேனை மெதுவாக விழுங்குவது, தொண்டையில் சிக்கிய முள்ளை கீழே நகர்த்துவதோடு, அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் தொண்டையின் வீக்கம் மற்றும் பாதிப்பை குறைக்கும்.

வெந்நீர் : சில நேரங்களில் முள் மிகச் சிறியது என்றால், வெதுவெதுப்பான நீர் மெதுவாக குடிப்பது, தொண்டை தசைகளை தளரச் செய்து, முள்ளை சறுக்க உதவும்.

இந்த எளிய முறைகளால் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், வலி, இரத்தம் அல்லது தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்தால், தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். மீன் முள் நீண்ட நேரம் தொண்டையில் சிக்கியிருப்பது, ஆபத்தை விளைவிக்கும்.

Read More : பிளஸ்1 மாணவர்களே ரெடியா..? இன்று முதல் ஆரம்பம்..!! உங்களுக்கு ரூ.1,500 கிடைக்கப் போகுது..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

கொசுக்களால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு HIV வைரஸை பரப்ப முடியுமா?. உண்மை என்ன?.

Fri Aug 22 , 2025
கொசு கடித்தால் வைரஸ் காய்ச்சல் முதல் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் வரை பல கொடிய நோய்கள் பரவுகின்றன. ஆனால் கொசு கடித்தால் எச்.ஐ.வி வைரஸ் பரவுமா?. கொசு கடித்தால் பல கடுமையான தொற்றுகள் பரவுகின்றன. பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கொசு கடித்தால் மனித உடலை அடைகின்றன. ஆனால் கேள்வி என்னவென்றால், ஒரு கொசு எச்.ஐ.வி பாதித்த நபரின் இரத்தத்தை உறிஞ்சி மற்றொரு […]
mosquito HIV 11zon

You May Like