பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..?
உங்கள் உடலில் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தாலும், உடனடியாக குளித்துவிட்டு அருகில் உள்ள சிவன், விஷ்ணு, அல்லது விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபடலாம்.
பல்லி விழும் பலன்கள் :
* உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* இடது கை மற்றும் காலில்: இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
* பாதத்தில் பல்லி விழுந்தால், எதிர்காலத்தில் வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
* தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் தங்கம், வைரம், போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
* தொடையில் பல்லி விழுவது, பெற்றோரை வருத்தப்படுத்தும் செயல்களை செய்யக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
* வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.
* இடது கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவர்களுடன் பகை ஏற்படும்.
Read More : இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது போயிட்டு வாங்க..!! உங்க வாழ்க்கையே மாறும்..!! எங்க இருக்கு தெரியுமா..?



