தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே தவெக தலைவர் விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நாமக்கல்லில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தேவையா? பாசிச பாஜக உடன் நாங்கள் ஒத்து போகமாட்டோம்.. இந்த திமுக மாதிரி மறைமுக கூட்டணியில் இருக்க மாட்டோம்.. அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா அவர்கள் சொன்னதை மறந்துவிட்டு இன்று பொருந்தா கூட்டணி வைத்திருக்கிறார்களா? அவர்கள் மாதிரியும் நாங்கள் இருக்க மாட்டோம்.. பாஜக உடன் ஏன் பொருந்தா கூட்டணி என்று அதிமுகவின் தொண்டர்கள் கேட்கின்றனர்.. அதிமுக – பாஜக உறவுக்காரர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.. திமுக குடும்பம் பாஜக உடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்க்கள்..
வரப்போகும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. வேண்டாம் மக்களே ஜாக்கிரதை.. யோசிங்க.. மறுபடியும் சொல்றேன்.. 2026-ல் ஒன்னு தவெக.. இன்னொன்னு திமுக.. இரண்டுக்கும் தான் போட்டி.. இந்த தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.. மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாக இருக்கும் தவெக, கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்று கொள்ளையடிக்கும் திமுக இந்த இருவருக்கும் நடுவில் தான் போட்டி.. மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரணமா? உண்மையான மக்களாட்சி.. மனசாட்சி உள்ள மக்களாட்சி..உங்க நம்ம தவெக மறுபடியும் ஆட்சி அமைக்கணுமா? Sorry.. இப்ப தவெக ஆட்சி அமைக்கணுமா என்று கேட்டேன் Sorry.. என்று மீண்டும் கூறினார்.. நம்பிக்கை உடன் இருங்க நல்லதே நடக்கும்..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் விஜய்யின் இந்த பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.. விஜய்யில் போதையில் உளறுவதாகவும், பார்த்துக் கூட சரியா படிக்க தெரியவில்லை என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
Read More : மூச்சுக்கு 300 தடவை அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு.. பாஜக உடன் எதற்கு சந்தர்ப்பவாத கூட்டணி..? விஜய் கேள்வி..



