2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.. அந்த வகையில் தற்போது அதிமுக – பாமக கூட்டணி நேற்று உறுதியானது..
இந்த சூழலில் நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.. இந்த நிலையில் அமித்ஷாவுடன் பேசியது என்ன என்பது குறித்து இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது “ நேற்று அமித்ஷாவை அவர்களை சந்தித்து பேசினேன்.. தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் விரிவாக பேசினேன்.. திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணியில் சில கட்சிகள் சேர உள்ளன.. அது வலுவான கூட்டணியாக அமையும்.. எங்கள் கூட்டணி திமுகவை வீழ்த்தி பெரும்பான்மை வெற்றி பெறும்.. அதிமுக ஆட்சி அமைக்கும்..
திரு ஸ்டாலின் அவர்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.. இது அரசு ஊழியர்களை ஏமாற்றக் கூடிய நாடகம்.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கினைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் வேலை..
திமுக ஆட்சியில் 5.5 லட்சம் கோடி கடன் உள்ளது.. திமுக ஆட்சியில் போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.. ஓபிஎஸ்ஸையும் மீண்டும் சேர்க்கும் எண்ணம் இல்லை.. ஓபிஎஸ், சசிகலா இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது.. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. எங்கள் கூட்டணி உறுதியான போதே அமித்ஷா அதனை சொல்லிவிட்டார்..
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர உள்ளது.. கூட்டணி உறுதியான உடன் தகவல் தெரிவிக்கப்படும்.. இப்போதே எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை..” என்று தெரிவித்தார்..
Read More : இதை செய்தால் தான் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்.. விஜய்க்கு அமித்ஷா போட்ட ஒரே கண்டிஷன்..! பாஜகவின் பிளான் நடக்குமா?



