கடந்த சில மாதங்களாக உலகளாவிய சந்தைகளில் தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு சிறிதளவு விலை குறைந்திருந்தாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காணப்படுகிறது. 2025 முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படியிருக்கும்? என்ற கேள்வி உலக பொருளாதார நிபுணர்களையும், முதலீட்டாளர்களையும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவாதத்துக்கு மேலும் தீனி சேர்த்துள்ளது, புகழ்பெற்ற பால்கேரிய ஜோதிடர் பாபா வாங்கா கூறிய கணிப்பு தான். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டில் உலகளவில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். அவரது கூற்றுப்படி, உலக சந்தைகளில் ஏற்படும் நிலையற்ற தன்மை பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும். பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிட்டால், முன்கூட்டியே தங்கம் வாங்குபவர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் தருவாயில் இருப்பார்கள்.
உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். அடுத்த தீபாவளிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.1,62,500 முதல் ரூ.1,82,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் இது ஒரு புதிய சாதனையாகும்.
2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலைகள் குறித்த பாபா வாங்காவின் கணிப்பு உலக சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் நடுத்தர மக்களுக்கும் அதிர்ச்சி அடைந்தூள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் தங்கத்தை கவனமாக சேமித்து வைத்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மில்லியனர் அல்லது பில்லியனர் ஆவீர்கள்.
Read more: Flash : அடுத்த 3 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கும்.. இந்த 11 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க..!



