எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.. தனது பிரம்மாண்ட மேக்கிங் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ராஜமௌலி.. குறிப்பாக ராஜ விசுவாசியாக இருந்த கட்டப்பா, அமரேந்திர பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிக்கப்பட்டது.
இந்த கேள்வி பாகுபலி 2-வது பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.. 2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படம் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்து மாபெரும் சாதனை படைத்தது.. இந்த படம் ரூ.1800 கோடி வரை வசூல் செய்து இன்று வரை இந்திய அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் 2-வது இடத்தில் உள்ளது.
பாகுபலி படங்களின் 10 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை சேர்த்து ஒரே படமாக ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று சமீபத்தில் ராஜமௌலி அறிவித்திருந்தார். ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்போர் 31-ம் தேதி இந்த படம் ரீ ரிலீசாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் “கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்” என்ற பிரபலமான கேள்விக்கு பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அளித்துள்ளனர். இந்த பதில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…
‘பாகுபலி’ என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்று பதிவிடப்பட்டது. இதற்கு படத்தில் பல்வால்தேவனாக நடித்த ராணா “நான் அவரைக் கொன்றிருப்பேன்” என்று பதிவிட்டார்.
ஆனால் வேடிக்கை இதோடு நிற்கவில்லை. பாகுபலியாக நடித்த பிரபாஸ் இதுகுறித்து தனது இன்ஸ்டா பதிவில் “நான் அதை நடக்க அனுமதித்தேன் பல்லா.. இதற்காக( பாகுபலி வசூல் சாதனக்காக) !” என்று குறிப்பிட்டுள்ளார். பாகுபாலி 2 படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு வசூல்” என்ற போஸ்டருடன் அவர் பதிவிட்டிருந்தார்.
