மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சால் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும் பல அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.. காய்ச்சல் இருந்தால் சுய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.. மேலும் காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை உடன் நடந்த் கொள்ள வேண்டும் எனவும் குறைந்தபட்ச சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சால் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read More : 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! கனமழை வெளுத்து வாங்கும்..!! மீனவர்களுக்கு வார்னிங்..!!



