வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஜூன் 7 ஆம் தேதி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் மீண்டும் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக இரைப்பை குடல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கங்கா ராம் மருத்துவமனை அறிக்கையில் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துவருகின்றனர்.