WhatsApp New Feature | வாட்ஸ் அப்பில் வந்தாச்சு செம அப்டேட்..!! இனி ஸ்டேட்டஸ் வைக்கும்போது இப்படியும் செய்யலாம்..!!

Whatsapp New Update 2025

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் சில சிறப்பம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய லேஅவுட் மூலம் அதிகபட்சம் 6 புகைப்படங்களை ஒன்றாகக் கொடுத்து, அழகான கொலாஜ் உருவாக்கலாம். திருமணம், பிறந்தநாள், பார்ட்டி போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை இனி தனித்தனியாக வைக்காமல், ஒரே இடத்தில் வைக்கலாம்.

மேலும், “Music Posts” மூலம் தங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் பாடல்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம். போட்டோ ஸ்டிக்கர் வசதியால் எந்தவொரு புகைப்படத்தையும் ஸ்டிக்கராக மாற்றி, விருப்பமான அளவு மற்றும் வடிவில் ஸ்டேட்டஸில் சேர்த்துக் கொள்ளலாம். “Add Yours” என்ற புதிய பகுதி மூலம், நண்பர்கள் இடையே ஒரு கலந்துரையாடலை கூட துவங்க முடியும். உங்கள் கேள்விக்கான பதில்களை நண்பர்களும் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஸ்டேட்டஸ் என்பது வெறும் புகைப்படம், வீடியோ பதிவிடும் இடமாக மட்டுமின்றி, கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த மாற்றங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More : “இந்த தேதிகளில் ரேஷன் கடைக்கு போகாதீங்க”..!! மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

CHELLA

Next Post

மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.83,880 சம்பளத்தில் வேலை..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue Jun 3 , 2025
ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]
RCFL JOB 2025

You May Like