முதல்வர் ஸ்டாலின் 2,3 நாட்களில் வீடு திரும்புவார் என்று அவரின் சகோதரர் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.. அப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. அடுத்த 3 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இதனால் அவர் 3-வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. இதனிடையே மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்..
இன்று காலை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது முதலமைச்சர் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார். மேலும் முதல்வர் 2,3 நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் இன்றும் முதல்வரின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார் என்றும் அவர் 2,3 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்..